Type Here to Get Search Results !

OBC சான்று (இதர பிற்படுத்த வகுப்பினர் சான்று Other Backward Class certificate)


 OBC சான்று
 (இதர பிற்படுத்த வகுப்பினர் சான்று 
 Other Backward Class certificate)

 OBC சான்றிதழ் என்பது, சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ள "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை"  சேர்ந்தவர்கள் என  அரசால்  வழங்கப்படும் சான்றிதழ் ஆகும்.  

 எதற்கு தேவைப்படும்❓
 மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இட
ஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்கு உதவும்.
எ.கா NEET, JEE, SSC, UPSC

 சான்றிதழ் வழங்குவது யார்❓
மத்திய அரசு இட ஒதுக்கீட்டுக்கு பயன்படும் சான்று என்றாலும் அதை வழங்குவது அந்தந்த மாநில அரசுகள் தான். 

 பெறுவதற்கான தகுதிகள் என்ன?
பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக(BC, MBC, DNC✅) இருக்க வேண்டும். (OC, SC&ST❌ வகுப்பினர் அல்லாதோர் ) இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். (எனினும் சம்பளம் மற்றும் விவசாயம் மூலமாக வரும் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று விதி இருப்பதால் 8 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் கொண்டவர்களும் இந்த சான்று பெற முடியும்)

 இந்த சான்றிதழை பொருத்தவரை வருமானம் மற்றும் வகுப்பு மட்டுமே பார்க்கப்படுகிறது. ஒருவரது பெயரில் இருக்கும் சொத்துக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

 எங்கு விண்ணப்பிப்பது?
tnedistrict.gov.in இணையதளத்தில் இ-சேவை மையங்களில் இணையவழியில்  விண்ணப்பிக்கலாம். 

 தேவையான ஆவணங்கள்

1)விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 

 2)ஆதார் அட்டை

 3)குடும்ப அட்டை

 4)வருமானச் சான்று

 5)சாதி சான்று 

 இதில் விண்ணப்பதாரரின் பெற்றோரின் ஆண்டு வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Top Post Ad