Type Here to Get Search Results !

புது ட்ரிக்..! கூகுளில் '67' என்று தேடினால் என்ன நடக்கும் தெரியுமா ?




நீங்கள் கூகுளில் 67 நம்பரை தேடினால் உங்கள் திரையில் ஒரு மேஜிக் நிகழும். இந்த டிரெண்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் இந்த புதிய ட்ரிக்கை தங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் செய்து பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

அதாவது செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றில் கூகுளை திறந்து 67 அல்லது 6-7 என டைப் செய்து என்டர் செய்தால் போதும். சில விநாடிகளில் உங்களின் செல்போன் மற்றும் லேப்டாப் ஸ்கிரீன் சற்று 'ஷேக்' ஆகும். இதனை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்.

மேலும், செல்போன் அல்லது லேப்டாப்பில் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். இது தனது வாடிக்கையாளர்களுக்கு கூகுள் தந்துள்ள 'சர்ப்ரைஸ்' மட்டுமே. இதனால் உங்களின் செல்போன் மற்றும் லேப்டாப்பிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

அதேபோல், தான் கூகுளில் மற்றொரு பிரபலமான ட்ரிக் 'டூ எ பேரல் ரோல்'ஆகும். அதன்படி, கூகுளில் "Do a barrel roll" என்று டைப் செய்தால், உங்கள் திரை முழுவதுமாக 360 டிகிரி சுழன்று பழைய நிலைக்கு வரும். 

பார்ப்பதற்கு ஏதோ தொழில்நுட்பக் கோளாறு போல தோன்றினாலும், இதுவும் கூகுளின் பிரபலமான மற்றும் சுவாரஸ்யமான 'ஈஸ்டர் எக்' (Easter Egg) அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இதையும் பயனர்கள் ட்ரை செய்து மகிழ்ந்து வருகின்றனர்.


Top Post Ad